ஞாயிறு, 28 ஜூலை, 2024

சியர் சிங்கி அல்லது கிதார் சிங்கி

                                    

சியார்(SIYAR) அல்லது கிடார் (GIDAR) என்றால் குள்ளநரி (JACKAL) என்றும் சிங்கி என்றால் கொம்பு (HORN) என்றும் பொருள். சியர் சிங்கி அல்லது கிதார் சிங்கி என்றால் குள்ளநரியின் கொம்பு என்று பொருள். இது குள்ளநரி  நெற்றியில் காணப்படும் கொம்புடன் கூடிய கூந்தல். இது அபரிமிதமான சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் தாந்த்ரீக யோகா மற்றும் பல வேத சடங்குகளில் இது மிகவும் அவசியம்.  இந்த சியார் சிங்கியை வைத்திருப்பவர் தனக்கு வரும் அனைத்து பிரச்சனைகளில் இருந்து வெற்றி பெறுகிறார், மற்றும் ஏவல், பில்லி, சூனியம் மற்றும் கண்திருஷ்டி போன்ற அனைத்து எதிர்மறையான விஷயங்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறார், சியார் சிங்கி இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல்கள் நெருங்கவே நெருங்காது. இது சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில் கிடைக்கிறது, சியார் சிங்கி மிகவும் அரிதான மற்றும் விலையுயர்ந்த பொருளாகும். சியார் சிங்கி வாங்குபவர் அதனை வாங்குவதற்கு முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல மோசடி விற்பனையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பல வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர். எனவே, உண்மையான சியர் சிங்கி தானா என்பதனை  சரிபார்த்து வாங்குவது மிகவும் முக்கியமானது.

குள்ளநரிகள் பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படும். பொதுவாக, சிறிய வயதில் கொம்பு இருக்காது, ஆனால் சியார் சிங்கி குள்ளநரிகள் வளரவளர கொம்பு முடி வழியாக வெளியே வரும். இது அற்புதமான மகத்தான மற்றும் விசித்திரமான சக்தியைக் கொண்டுள்ளது, சியார் சிங்கி தன வசியம், ஜன வசியம், தொழில் வசியத்தை உண்டாக்கும். சியர் சிங்கி ஏவல், பில்லி, சூன்யம் மற்றும் தீமையானா கண்திருஷ்டியில் இருந்து  பாதுகாப்பு அளிக்கிறது. சியார் சிங்கி வைத்திருப்பவர்களுக்கு சொத்து சேர்ந்துகொண்டே இருக்கும் . சியார் சிங்கி முறைப்படி சுத்தி செய்து முறையான வசிய மந்திர உருவேற்றி பின் வெள்ளிப் பெட்டியில் செந்தூர பொடியில் வைக்கப்பட்டுகிறது. பின்னர் அந்த வெள்ளிப் பெட்டி உங்களின் பணப்பெட்டி, பீரோ அல்லது பூஜை அறையில் வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடி தானாகவே வளரும். பல வணிகர்கள் அதை லாக்கர் மற்றும் பணப்பெட்டியில் வைத்திருப்பார்கள், ஏனெனில் இது மிகப்பெரிய செல்வத்தை உருவாக்குகிறது.

பழங்காலத்திலிருந்தே, கிடார் சிங்கி அல்லது சியார் சிங்கி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தாந்த்ரீக பரிகாரங்களில் மக்களால் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மக்கள் தங்கள் வீட்டில் இருந்து பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் எதிர்மறையை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. சியார் சிங்கி கோர்ட், கேஸ், வழக்குகளில் வெற்றி அளிக்கிறது, சொத்து குவிப்பு, போட்டி தேர்வுகளில் வெற்றி மற்றும் அதிகாரங்களைப் பெறுவதில் சாதகமான முடிவுகளை அளிக்கிறது. வெள்ளியால் ஆன பெட்டியில் செந்தூர பொடியில் வைக்க வேண்டும். அதை லாக்கர்களில் வைப்பதும் விசித்திரமான ஆனால் நேர்மறையான விளைவுகளைத் தருகிறது. பல தாந்த்ரீக பரிகாரங்களில் சியார் சிங்கி  இன்றியமையாததாக விளங்குகிறது. சியார் சிங்கி வசியம்  மற்றும்  திருமண பாக்கியம், அதிர்ஷ்டம், கடன்கள், உடல்நலம் மற்றும் பிற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. வேத விஞ்ஞானம் அதன் சக்தி மற்றும் மர்மமான குணப்படுத்தும் திறன்களைக் குறிப்பிட்டுள்ளது.




செவ்வாய், 23 ஜூலை, 2024

கண்திருஷ்டியால் உண்டான உடல்நல கோளாறு நீங்க


 கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியத்தால் உண்டாகும் உடல் நல குறைவு நீங்க....



முச்சந்தி மண், ஒன்பது காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி உப்பு, கொஞ்சம் கடுகு - கொட்டாங்குச்சி அல்லது இரும்பு பாத்திரத்தில் போட்டு - உடல் நலம் குன்றிவரை கிழக்கு பார்த்து அமரவைத்து, அந்த கொட்டாங்குச்சியை வலமாக மூன்று முறை சுற்றி "கண்பட்ட திருஷ்டிகள் கடுகு போல் வெடிக்கட்டும்" என்று சொல்லி கடவுளை வேண்டி, கரி அடுப்பு பற்றவைத்து அந்த தனலில் போட வேண்டும். கைகால் சுத்தம் செய்த பிறகு அல்லது குளித்து தானும் விபூதி பூசி, உடல் நலம் குன்றியவர்க்கும் விபூதி பூசி விட்டால் உடலில் தோன்றிய பாதிப்பு நீங்கும்.


பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்

                                           பூனையின் தொப்புள் கொடி - தாந்த்ரீகம்   ஹிந்தி மொழியில் பில்லி கா ஜெர் (பூனையின் தொப்புள் கொடி) என...