வியாழன், 20 மார்ச், 2025

ஜீவநாடி என்றால் என்ன?

 ஜீவநாடி என்றால் என்ன?



“ஆதி என்னும் அசுதினாபுரம் கேளப்பா சொல்லுவேன்

இப்பாரதத்து பெருநகர் ஆங்கென் ஒளர் விரிசலும்

காலவழி தன்னிலே குறுக்கிடலும் விதியாகும்

வலுவிழர்ந்தார்ப் போல வாட்டமது கொண்டார்ப் போல

நின்றிடினும் கூட்டமது காண ஒளர்வழி

உலகுக்கு ஒளிஒத்து உத்தமர்க்குப் பெரும்பலன்

ஏற்றிய விளக்கொளி என்று ஞானியரும் ஜீவமுக்தரும்

யோகியரும் சித்தாதிப் பெருமுனியொரும் விண்டுரைதவாறு

தவஒளியாலே ஒளர்பலன் துல்லியமாய் எழுந்துபேச

துரிதத்தினால் துரியாதீதம் கடந்துமறு கண்ணும் ஒளர்வழிகண்டு

வையகத்தார்க்கு உறவென்னும் ஒளர்நிலை பதவி உகந்தேகூட்டவே

பாரதத்தின் பெருமைஒளி பருலகோர்க்குக் கண்ணொளியும்

நிறைபலம் காணச்செய்யும் விதியது இனியாகுமப்பா!


- காகபுஜண்டர் ஜீவநாடி


நாடியில் குறிப்பிட தகுந்த உயர்வான ஒன்று ஜீவநாடி ஆகும். இதுஒரு அதிசயநாடி என்றும் அற்புதநாடி என்றும் கூறினாலும் மிகையில்லை. ஜீவன் என்றால் உயிர், ஜீவநாடி என்றால் உயிர்நாடி என பொருள்படும், ஜீவிதம் என்றால் மனித வாழ்க்கை ஆகும். எனவே மனித வாழ்வில் தோன்றும் சிக்கல்களுக்கு, என்று கேட்கும் நேரத்தில் உயிர்பெற்று பலன் சொல்வதால் அத்தகைய ஓலைச்சுவடிகளை ஜீவநாடி போற்றுகிறோம். அவ்வாறு மனித வாழ்வில் முன் பிறவிகளில் செய்த கர்ம வினை பதிவுகளால் இந்த பிறவியில் நமக்கு வரும் கர்மவினையால் நாம் அடையும் துன்பங்கள் தீரவும் வழிகாட்டும் விதமாக சித்தர்களும், மகாமுனிவர்களும் இத்தகைய ஜீவநாடி ஓலைச்சுவடிகளை இயற்றினர்.


சித்தர்கள் மற்றும் மகரிஷிகளின் ஜீவநாடி என்பது அரூபமாக நாடி படிப்பவரின் கண்களுக்கு ஒளிரும் மஞ்சள் நிறமுடைய எழுத்துக்களாய் தோன்றி பலன் கேட்பவரின் வினைபதிவினையும் அதனால் உண்டாகும் நல்ல மற்றும் தீய பலன்களையும், அவர்களுக்கு நேரும் துன்பங்களை போக்க செய்யவேண்டிய பரிகாரங்கள், பூஜைகள் மற்றும் செய்யவேண்டிய முறை முதலியவற்றை தெளிவாக பாடல்கள் வாயிலாக ஜீவநாடி படிப்பவர்க்கு உணர்த்தும். ஜீவநாடி படிப்பவர் படிப்பை நாம் எழுதிவைத்துக்கொண்டோ அல்லது ஒலிநாடாவில் பதிவு செய்துகொண்டோ பின்னர் பாடல்களுக்கு விளக்கத்தினை அவரிடம் கேட்டு அறிந்துகொள்ளலாம்.

ஜீவநாடியை எல்லோரும் படித்து பலன் சொல்ல இயலாது, இறைஅருளும், சம்மந்தப்பட்ட சித்தர் மகரிஷிகளின் ஆசியும் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஜீவநாடி உயிர்பெற்று பலன் சொல்லும், மற்றவர் கண்களுக்கு சாதாரண ஓலைச்சுவடியாகவே காணப்படும்.


இந்த உலக வாழ்வில் ஆன்மீகவழியில் நடந்தால் மட்டுமே நன்மைகள் பெறமுடியும், சித்தர்களின் சக்திகள் என்பது நாம் அறிந்த ஒரு விசயமாகும். இன்றைய விஞ்ஞானிகளுக்கு புரியாத பல விசயங்களை பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிட்டு சொன்னவர்கள் சித்தர்கள். 


இறைவனோடு இரண்டற கலந்தவர்கள் சித்தர்கள். இத்தகைய சித்தர்களால் சாதிக்கமுடியாத விஷயம் ஏதும்இல்லை. இத்தகைய சித்தர்கள் எழுதிய ஜீவநாடி உலகமக்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷமாகும்.இத்தகைய ஜீவநாடி சுவடிகள் அரிதாகவே உள்ளன. அத்தகைய ஜீவநாடி சென்னையில் மறைந்த ஜோதிட பெருமகனார் திரு.ஹனுமன்தாசன் அவர்களிடம் இருந்தது. அதன் மூலம் பயனடைந்தோர் பலர், அவர் வாசித்த சுவடி அகத்தியர் ஜீவநாடி ஆகும்.மேலும் தஞ்சையில் ஜோதிடர் திரு.கணேசன் அவர்களிடமும் ஒரு ஜீவநாடி சுவடி உள்ளது.

ஜீவநாடி என்பது நம்மை வாழ்விலும், வளத்திலும், ஆன்மீகத்திலும் உயரவைக்கும் உயிர்நாடி ஆகும். நம் வாழ்வின் அனைத்து சிக்கல்களுக்கும் உடனடி தீர்வினை தரும் உயர்நாடி ஜீவநாடி ஆகும். இத்தகைய அபூர்வசக்தி கொண்ட அகத்தியர் சித்தரின் ஜீவநாடி எங்களின் இயக்கி விருட்ச பீடத்திற்கு இறையருளால், சித்தர்கள் அருளாசியால் வந்து சேர்த்தது, பக்தர்களின் குறைதீர ஜீவநாடி படித்து பலன்களை சொல்லிவருகிறோம்.


ஜீவநாடியில் அகத்தியரின் அருள்வாக்கு பெற வரும் அன்பர்கள், தெய்வத்திற்கு மற்றும் சித்தர்களுக்கு பூஜைக்கு உரிய புஷ்பங்கள், தாம்பூலம்(வெற்றிலை&பாக்கு), கனிவகைகள் படைத்து அகத்திய பெருமானிடம் மனமுருகி தனது பிரார்தனைகளை சொல்லி வணங்கி அருள்வாக்கு பெற்று வாழ்வில் வளம்பெறலாம்.


முகவரி : 

"சாக்த முயற்சி" டாக்டர். லட்சுமி தாச சுவாமிகள்,

26/6, கிச்சகத்தியூர்,

இலுப்பபாளையம் (அஞ்சல்),

சிறுமுகை (வழி) - 641302,

மேட்டுப்பாளையம் வட்டம்,

கோயம்புத்தூர் மாவட்டம்.

செல் : 7397290727.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜீவநாடி என்றால் என்ன?

  ஜீவநாடி என்றால் என்ன? “ஆதி என்னும் அசுதினாபுரம் கேளப்பா சொல்லுவேன் இப்பாரதத்து பெருநகர் ஆங்கென் ஒளர் விரிசலும் காலவழி தன்னிலே குறுக்கிடலும...